முக்கடல் சந்திப்பில்
முதல் தருணம்
அவளைப் பார்த்த தருணம்
முள் பாதை தாங்கி என் வழி
முதல் முறை அவள்
இதயத்துடிப்பின் அமைதியில்
கனவு கூடக் காண முடியா
தனிமையை தனி வரலாறு
படைப்பேன் என்ற
நம்பிக்கையில் நான்
இப்போது இவள் இதயத்துடிப்பின் சத்தம் மட்டும்...
என் அமைதி பேரமைதி
எங்கள் நினைவை
இந்த வரலாற்று
புத்தகத்தில் எவ்வாறு கிழித்தெடுப்பது ?
எங்கள் நோக்கம் கலவியா அல்ல வயது கோளாறா அல்ல எதார்த்த வாழ்வில் புரிதலா ?
அப்படி இல்லை நெடுந்தூர பயணத்தில் உணவு இடைவேளை அப்போது நிழல் தரும் மரம்போல,
அதிகம் செலவு செய்யாமல்
உயர்ரக சைவ விடுதி
போல அப்படி கவனிப்பு
இந்த மர நிழல் அடி
அதுபோலவே நாங்களும்,
இது என் தனிமை காலம்
இது யாரும் வேண்டாம்
அவள் நினைவுகள்
போதுமானது...
வாழ்க்கையை கடக்க அல்ல
ஒரு நொடியைக் கடக்க,
அவள் தரும் நொடியை
ரசித்தவன் நான்
ஆனால் எவ்வாறு
இப்போது கடக்க ?
உன் உயிர் காட்டில்
மோகம் தலைக்கேறி
உயிர் மறந்து, கனவு தொலைந்தது...
என்
முன் பனிக்கால போர்
இதற்கு உயிர் தவிக்கிறது...
முதுவேனில் கால போரை எவ்வாறு
தொடுப்பேன்?
என்னவலே முடியாது என்பதை
தெளிவாகக் கூறிவிடு.,
உன் தாயிடம் நம்மைப் பற்றி
உற்றாரின் வரிகள் எங்களைப் பற்றி,
அவள் ஒரு மன நோயாளி
இவன் ஒரு அரகிறுக்கன்
இவர்களே ஒரு ஜோடி.,
நீ குடுத்த முதல் முத்தத்தின்
எச்சில் கூடக் காயவில்லை
எவ்வாறு உனை இழப்பேன்?
என் போராட்ட குணம்
உன் காலடியில்
முடிவு உன்னுடையது...
வஞ்சிப் புற நாயகனின்
தலைவியே,
என் சிறுபொழுது மாலை
நாயகியே
ஐந்திணையின்
இடை அழகே
போதுமா என் ஆசை
ராணிக்கு ஒப்பனை
வருவாய் இந்த மாயேனை
தேடி,
காத்திருப்பேன் உன் பதிலை நாடி...
by,
Jay