அவள் இதழ்களுடன்...
சிந்தனைகளும் கூட...
உடல் வலிகள்
போக இதழோரம்
விதை இடு என்று
காத்திருந்தவன் நான்
காதல் கூட
கடந்து போதும்
அவள் இதழோர
வரியை எப்படி கடப்பது...
ஒரே வார்த்தையில்
வாழ்க்கையை முடித்தவள்
அவள்(Jay வேணும்)...
காலம் கடந்தும்
வரையறை அற்றும்
நிகழ்கால எதார்த்ததை
மறந்தும்
உயிர் கலத்தில்
உடல் துலைத்து
மனம் உறுகி
வேண்டும் என்றால்...
நான் என்ன செய்வது?
அவளை வரையறுக்க
நான் கவிஞனா...
கவி மட்டும் போதுமா ?
உயிர் கூடலின்
இருந்த
இந்த சிந்தனை
எதிர்கால ஒப்பந்தங்களை
மறைத்து விட்டது...
உயிர் கூடல்
மட்டும் போதுமா?
என்ற சிந்தனையில்
அவள் இப்போது...
நான் காதலை
மறப்பவன்,
மறுப்பவன்.
அவளிடம் மட்டும்
என்னவோ தெரியவில்லை
வரையறை அற்று
நிக்கிறேன்...
அவளின் சிறு அசைவு
கூட நான்
சிந்தித்ததே...
என் உலக அரசின்
அரசி அவள்...
அவளின் சேவகன்
நான்...
ஆம் மட்டும் தான்
என் விடையாக
இருக்கும்...
உடல் கூறுகள்
என்ன முக்கியமா
அவளிடம்
என்னவளிடம்?
என்னவளுக்கு என்ன
உவமைக்
கொண்டு வருவேன்...
இல்லை, வேண்டாம், கட்டுப்பாடு என்ற
என் வாழ்க்கை சுழற்சியில்
முதல் முறை நீ (Jay) என்றால்...
அவளை வரையறுக்க
சில வரிகள்...
மாதவின் வடிவும்
கண்ணகியின் வெடிப்பும்
சிதையின் வீரமும்
ராதாவின் காதலும்
காந்தாரியின் தவமும்
சக்தியின் கோபமும்
ஆண்டாளின் பற்றும்
ஒருசேர கண்டேன்
அவளிடம்...
எவ்வாறு பிரிவேன் அவளை?
நான் என்ன
காதலித்தவனா?
அல்லது
நான் என்ன
நண்பனா ?
நான் அவளுடையவன்
நான் அவளுடையவன்
எவரேனும் கூறுங்கள்
அவளிடம்...
நீ இல்லாமல் அவன்
நொடிப்பொழுதும்
மரணிக்கிறான் என்று !!!
இன்று தான்
முதல் முறை வெட்கம்
விட்டு பேசிய
தருணம்
நீ எனக்கு
வேண்டும் என்று
தைரியத்தின் உச்சகட்டம்
உயிர் போராட்டங்களில்
முதல் வெற்றி
நான் சொன்னது...
என் எதார்த்த உலகின்
முதல் பிரமாணம்
நீ மட்டுமே
என் மனைவி என்று
நட்சத்திரங்களுக்கு
கூட தெரியும்
நான் விண்மீன்
வேட்டைக்கு செல்பவன்...
ஆனால், இப்போது
மின்மினி பூச்சிகளும்,
உன் எண்ணிலடங்கா
நினைவுகளும் மட்டுமே
என் வேட்டையின்
பரிசாகிறது...
எவ்வாறு ஏற்பேன்
நீ இல்லை என்று...
சிந்தனையில் கூட
இல்லாத சிறு துளி அது...
வாழ்க்கை முழுவதும் எப்படி ?
நானும் கொள்கைவாதி தான்
கொள்கைகளை தளர்த்த
மனம் இல்லை.
முடியாது...
முடியவே முடியாது...
தொடக்கத்தில் இறுதியை
கண்டு விட்டேன்.
இதில் என்ன
சுவாரசியம் ?
நடப்பது நடக்கட்டும்
கொள்கை மட்டும்
தான் என் ஒரே
வழி(லி)