முதல் சந்திப்பு

Love

முதல் முறை 
இரவு கனவில் அவள் 
என்ன சொல்வேன்... 
கொள்கைகளை களைத்தவள் 
இன்று கனவில் 

அவள் கோவம் 
பளிச்சிடும் நாசி 
என் கனவின் 
உயிர் மூச்சாகியது 

முதல் கேள்வி அவளிடம்? 
முத்தம் பிடிக்குமா? 
உயிர் பகிர்தல் பிடிக்குமா? 
சண்டை பிடிக்குமா? 
பேசப் பிடிக்குமா? 

கனவில் கூட கேள்விகள்
தான் என் நிலைமை 

செம்மையான தமிழின் 
தொன்மையான வரலாறாய் 
பந்தம் அவளிடம் 

ஆட்டக் குதிரையின்
தடை கவன சிதறல் 

அது போல் தான் 
இந்த ஆட்டக் குதிரையின் 
சிதறல் அவள் 

காலம் திருத்தி 
கட்டி அணைத்து 
ரசிக்க ஆசை... 

பேராசையாய் கூட இருக்கலாம்...  

மானுட உலகத்தின் 
முதல் புரட்சி என் 
காதலா இருக்கட்டும் 

கனவு கலைந்தது 

நிஜத்தில் கூட இப்படித்தான்... 


தைரியத்தை வரவழைத்து

கண் பார்த்துக் கூறினேன் 
நீ வேண்டுமென்று 

ஒரு கோடி புயல் 
ஒரே நொடியில் 
கடந்தது போல... 

அவள் சிறு புன்னகையில் 
தலையசைத்தால் 

விடையையறியா நான் 
உறைந்த நிலையில்


எங்கள் முதல் சந்திப்பு 
ஆனால் வெகு தூரத்தில்

அந்த நேரம் சிந்தனையில்?  

பேசுவாளோ! 
கைப்பிடிப்போமோ
கட்டியணைப்போமோ! 

ஆனால் நடக்கவில்லை... 

நடக்கும் 


உடல் மொழிகள் மட்டும்
என்ன காதலா 
மன மொழிகளும் 
காதல் தானே 

காத்திருக்கிறேன் முதல் 
சந்திப்பின் முதல் 
முத்தத்திற்காகக் 


கடவுள் தரிசனம் 
என்ன அவ்வளவு எளிதா? 

அப்படியானாலும் 
கொண்டு சென்ற பூக்களைச் 
சமர்ப்பித்து கோரிக்கை 
வைக்க மறப்பவன் நான்... 

கோரிக்கைகளும் புதிதுதான் 


என்னவென்று கேட்பேன்? 

அவள் வேண்டுமென்றா
சண்டை வேண்டுமென்றா 
இல்லை அவள் கூந்தலில் 
துயில் உறங்க வேண்டுமென்றா ? 

காலங்களும் வேண்டும் தான் 
அவள் நகத்தினை கூட 
வரையறுக்கக் 


காத்திருக்கிறேன் சந்திப்போம்...

Previous Post Next Post

Contact Form