முதல் பரிசு
காதலில் விழுந்த அனைவரும் தத்துவவாதிகளே....
அது
முதல் தருணம் அல்ல எனக்கு
காதல் எல்லை அறியா
கடல்.....
அவளை கண்ட தருணம்
இடியின் பாய்ச்சல்
முடிவறியா தொடக்கம் அன்று
இன்று வரை அப்படிதான்....
அவள் ஒரு வகை தேடலின் அரசி
தேடலில் தொலைந்தவன் நான்
இரு வேறு கட்டுரைகள் ஒன்று படும்
இடம் முடிவுரை தான்...
கண்டதும் காதல்
கொண்டதும் கொள்கை என்று
இருந்தவன் நான்....
அவளிடம் மட்டும் இரண்டடி இடைவெளி
பொருளற்ற சந்திப்புகள்
திசையற்ற தேடல்
கொள்கை வழி நான்
தேடல் வழி அவள்
இறுதியில் பார்போம்...
அதுவரை உன் (மன)படுக்கை அறையில்
ஒரு ஓரம் அல்லது கதவு ஓரம்
உன் அமைதி ஒப்பந்தம்
உள் பொருள் நான் அறிவேன்
மூடர்களின் உலகம்
முற்று பெறுவதில்லை.....
நான் அல்ல
எது ஈர்த்தது ?
மூக்குக்கண்ணாடியா...!
அந்த காந்த கண்களா?...!
அதன் மேலிருக்கும் ...!
வளர்ந்தும்-வளராத...!
அந்த புருவமா?!
கோபம் பளிசிடும் நாசியா?!
என் கவி
படிக்கும் உதடுகளா?!
அந்த அழகிய காதா?!
சங்கிலி அலங்கரிக்கும்...!
சங்கு கழுத்தா?!
சற்றே வளைந்திறுக்கும்...!
அந்த ஒற்றை விரல் நகமா?!
முதுகில் இருக்கும்...!
மச்சமா?!
என் உலக இசை தொடங்கும்
உன் கோழுசா?
எது ஈர்த்து உன்னிடம் ?
எவ்வளவு வர்ணித்தாலும்
வருணனையின் தோட்டம் அவள்....
தோட்டத்தின் காவல்காரன் நான்
அவளை ரசிக்க கண் போதுமா ?
உவமைகளும் தேவை தானா....!
by Jayasriraam. S