என் கொள்கை

The man


கொள்கை வரையறை அற்றது..

கொள்கை எங்கே ?

என்ற கேள்வி தான்...


முன்போல் முனைப்பு இல்லை

கொள்கையில்


அது தோல்வியின் வெற்றியா இல்லை

கொள்கையின் நடத்தையா

ஒரு வித சலிப்பு

பல சமயங்களில்...


எனது கொள்கை ?

எதற்கு கொள்கை ?

ஏன் கொள்கை ?


முன் சென்று பார்த்தால்

கொள்கைவாதிகளே வரலாற்றில் 

ஒரு வரி தான்


நான் என்ன செய்வேன் ?

என் கொள்கைகளும் புதிது தான்


என் கொள்கைகளை வரையறுக்க முடியவில்லை

காலத்தை தாண்டி நிற்கிறது...


கேளுங்கள் அடிமைகளின்

கொள்கைகளை 

வாழ்க்கை புரியும்


அது போல் தான் என் கொள்கைகளும்

எதார்த்தம் அறியாதவை


முடிவுலும் முற்றுப்பெறா என் கொள்கைகள்

அதிலும் தேற்கிறது


தோற்றுப் பழக்கப்பட்டவன் 

தோல்விகளுக்கு பயப்பதில்லை


பேரும்பாலும் கொள்கைகள் 

கெளரவத்தை தான் 

தாங்கி போர் செய்கிறது


பரிணாமத்தின் முதல் 

குழந்தை கொள்கை

அது என் நம்பிக்கை....


கொள்கையின் மீது கோபம் இல்லை

கொள்கைவாதிகள் மீது தான் கோபம்


எதற்கு கொள்கை என்ற கேள்வியில்

நான்?


ஒரு வகையில் ஒழுக்கமும்

கொள்கை தான்...


இப்போது ?


சமூகத்தின் கொள்கை அந்தஸ்து

மனிதனின் கொள்கை சுயநலம் (மிருகம்)

காதல் கொள்கை காமம்

அடிமையின் கொள்கை கண்டு-காணாமல்

பசியின் கொள்கை இறப்பு

அரசின் கொள்கை வரி-சுரண்டல்

தலைவனின் கொள்கை பேச்சு-மட்டும் 

புத்தகத்தின் கொள்கை அறையில் மட்டும்

பணத்தின் கொள்கை அதிகாரம்

வெற்றியின் கொள்கை பணம்

காலத்தின் கொள்கை எதிர்காலம்

அரசியலின் கொள்கை X தளத்தில் ஒரு பதிவு


கொள்கைகளால் படைக்கப்பட்ட

உலகம் இது

ஆனால் கொள்கைகள் தான்?...


வலிகளின் வழி தான் கொள்கை

அந்த

கொள்கை வழி தான் நானும்...


கொள்கைவாதிகளே கொள்கைகளை 

காப்பாற்றுங்கள்...!

Previous Post Next Post

Contact Form