பயணம் ஒருவனின்
முக்தி...
நாடோடித்தனம்
போற்றப்பட வேண்டியது
எனைப் பொருத்தவரை...
பயணம் வீட்டை நோக்கி
பல சிந்தனையில்....
நான் இன்றி
தனித்த மரம்...
கிளைகளில் கூட
பல கதைகள்
பாதை நெடுகும்
பல நினைவுகள்
ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும்
நின்றே சலித்தது...
பள்ளியை கடந்த போது
பாலிய நண்பர்களின்
நினைவு
பழைய காதலிகளின்
நினைவும் கூட...
முன் போல் இல்லை
எங்கள் பள்ளி
பல்வேறு மாற்றம்...
என் நினைவில் பள்ளி...
மைதான பட்டாவின் கையெழுத்து
எங்கள் கால்முட்டி ரேகை
மரக்கிளைகள் எங்களின்
உடற்பயிற்சி கூடம்
தண்ணீர் தொட்டி
எங்கள் பொழுதுபோக்கு
சாலையோர
சாந்தி அக்கா கடை
பேச்சில் மட்டும் குறையில்லை
தமிழ் பாடம் அறையின்-வெளியில்
ஆங்கில பாடம் அதிர்ச்சியில்
கணக்கு பாடம் அனைத்தும்
இயற்பியல் பாடம் சிரிப்பு
வேதியியல் பாடம் கூட்டு-சேர்க்கையில்
உயிரியல் பாடம் அமைதி
என பல நினைவு...
சற்று தூரத்தில்
எங்கள் நிறுத்தம்...
நான் பழைய ஊருக்கு
சொந்தக்காரன்
தற்போது எவ்வாறு
கூறுவேன் நான் ?
பழைய ரம்மியம்
நான் பார்த்த பழைய ஆட்கள்
என்னை மட்டும்
நண்பனாக கொண்ட
கணால் பாதை...
நான் வளர்த்த
நொச்சி செடி...
என்னை வளர்த்த
சரள புழுதி...
மழைகால காவலன்
சீம-கருவேலம்....
எவ்வாறு கூறுவேன் முழுமையாக
இறுபது வருட வாழ்க்கையை ?
ஆனால்,. இது எங்கள் வீடு
ஒரு நாள் நள்ளிரவு
ஒரு சிந்தனை,
நான்
எப்போது கூறையை
முட்டுவேன் என்று...
தேங்காய் உடைத்த கல்
நான் உடைத்த அரிவால்
என்னை குத்திய கருவமுள்
நான் குளித்த ஆத்து மோட்டர்
தூங்க வைத்த ஆற்றோசை
மரங்களோடு பட்டிமன்றம்
பூக்களோடு போர்
இலைப்பாறிய தோட்டத்து கல்
பசிக்கு மாமரம்
விருந்துக்கு வாழைத்தோப்பு
மருந்துக்கு ஆத்து தண்ணி
என பல...
நான் பயணத்தை
வெறுப்பவன்...
ஆனால்,.
பயணஅனுபவம் தான்...
பயணத்தின் ருசி
உனை அடிமையாக்கும்
கேளுங்கள் பயணத்தின்
அனுபவத்தை
புரட்சி பிறக்கும்...
By, Jayasriraam.S