உன் தலைகுனிந்த பார்வை
கள்ளருந்திய போதை
நரியின் தந்திரம்
சிங்கத்தின் கர்ஜனை
அழகில் திமிரு
திமிரின் அழகியல்
கொள்கையின் வரையறை
உயிர் கோட்பாடு
கண்டுணர்ந்த நான் அறிவேன்
அவள் வர்ணிக்க முடியா
ராட்சசி என்று......
முள்ளும் மலருமாய்
மயிலும் தோரணையுமாய்
வெட்கத்தில் சிவக்கும் கன்னங்களாய்
தலை குனிந்து அழகாய்
தலைக்கேறிய திமிராய்
தலைசாத்த புதுமையாய்
அகத்தின் வரையறையாய்
உறைபனியின் பாசமாய்
கண்டுணர்ந்தேன் கவிதையின்
கவிதுவத்தை
உன் கண் என்ற இரு வரிகளில்...!!
நான் கண்ட நாழிகை கணக்கு,
பல உதிரிப் பூக்கள்!!!
இது என் கடிகார வருட கணக்கு
கண் கண்ட நேரத்தில்
தவரி விழுந்த தருணம்
தவரும் தருணத்தில்
தவம் கலைந்து
கள் அறுந்த தூண்டும்
கலை நயம் மிக்கவல்!!!
கடவுளின் கவிதுவம்
வார்த்தையில் வர்ணிக்க முடியா
மனோநிலை
கண்டவர் எவரேனும் கூறுங்கள்
என் வர்ணிக்க முடியா நிலையை
அவளிடம்!!!!
உன் பார்வையில்
வீழ்ந்த எனக்கு
உன் கண்களைப்
பார்த்துப் பேசும்
யுத்தி மட்டும் சொல்லிக்கொடு
(உன்) மர்மப் புன்னகையில் புதைந்துபோன
பதிவுகளை மீட்டெடுப்பேன்.
சொல் அழகு புத்தகமே!
உன் அச்சகத்தில்
நான் எத்தனையாவது பதிப்பு?
இப்படி என்னை
இலவசமாக கவர்ந்து
செல்கிறாயே!
திடீர் என்று ஒரு
சலனம் தேர்வு அறையில்
உன் கொலுசு சத்தம்...
என்னை
துயில் எழுப்ப....
கனாக்களில்
நான்!!!!
வினாத்தாள் வினவியது
எனை கண்டு
கொள்ளடா என்று...?
கனவில் கண்ட கற்சிலை
கண் எதிரே !
கனவு என்பேனோ !
அல்ல
கற்பனை என்பேனோ !
மதுவின் தாக்கத்தை
அறியா நான்
முதல்முறை மதமதப்பில்......
பழைய புகைப்படங்களை
திரும்ப பார்ப்பதில் தான்
எத்தனை சுகம் கண்மணி !
எனக்கே தெரியாமல் நீ
எனக்குள்ளே எவ்வளவு
ஆழமாக வேரூன்றியிருக்கிறாய்
என்பதை உணர வைக்கும்
தருணங்கள் அவை...!
உன் ஓரபார்வை
பலகோடி புயலின் வலிமை
கண் கண்டு மகிழ்ந்தும்
என் இசை
பறிக்கும் கொழுசும்
உயிர் குலைத்து
உன் வசம்
அகப்பட்ட நானும் !!!
உன் அனைத்து
தருணங்களும்
என் உணர்வுகளுடன்
இணைந்து பயணம் செய்ய ஆசையடி ?
கண் அயர கணநேரம்
கனவு காலம் நீளம்
கனவு கண்ட நான்
கனவு எது என்ற தேடலில் ?
உனை கண்ட கணத்தில்
உயிர் உருகி
சொல் தேடி
இதழ்களில் என் வாழ்க்கை
வரிகளை கொண்ட
சீமாட்டி நீ...
ஓ நிலவே !
உன் கர்வத்தை அடக்கி
ஆழும் அழகி அவள் !!!
கண்ணறியா கால் கொழுசின்
இசை வாத்தியம்
கண்ணசைவில் சிவதனுசை தூளாக்குபவள்
என் அருகில் இருந்தால்
என் செய்வேன் ?
மயங்காமல்......
கனியிதழ் பிழியும் மதுரச தேகத்தில்
மதி மயங்கி உன்னில்
எனையிழந்து என்னில் உனைத்தேடி
மதுரவாய் மலர்ந்து மகரயாழ்
மொழி பேசிய
காதல் மலர்கள்
கனவுக் கோட்டையில் நித்தில
கீதமாய் நீங்கா நினைவு
கனியில் தேன் கலந்து
கரும்பில் பால் சேர்த்து
இனிமை மொழியினளாய்
தனிமையில்
துதிபாடும் தூயவளே!
என்னருகே நீயிருந்தால்
மயங்காமல் என் செய்வேன் ?
உயிர் கொண்டு போகும் கண்கள்
பார்க்கும் நேரம் குறைவில்லை
பார்த்து தவிக்கும் சிறுவன் நான்
உயிர் வரம் கேட்பேன்
தருவாய் எனில்
மூச்சிரைத்து அனைப்பேன் !
Theriyala ma
Un specs
Un face
Un character
Un crazy
Un overthinking
Un love
Un family
Un Over pesu
Then ne,...
மதுவிற்கு விடுப்பு
தரும் கண்கள் கொண்டவள்...
நானென்பதை நானறிய நாளானது...!
உன் உதடுகள் என்
சொர்க்கமானதால்,
விழிகளில் கள்ளுறிஞ்சி
வார்த்தைகளில் முக்தி
பெற்றேன்..!!!
என்ன தருவது உனக்கு?!!
என்னையே தந்துவிட்ட பிறகு??!
காலம் நகர்ந்தும், முன்னேற்றம்
இல்லை என்னிடம்!
எனினும்
நான் கொண்ட காதல் குறையவில்லை
உன்னிடம்!
வலிகளும் ஏக்கங்களும்
நான் பழகிக்கொண்டது.
ஆனால் அதுதான்
உன் வாழ்க்கையானது!!
என் பலமும் பலவீனமும்
ஒருசேர காண்கிறேன்
உன்னிடம்.
அதில் நான் கொண்ட
நம்பிக்கையே தனித்துவம்.
நீயாக நான் மாற
எனக்கு தகுதியில்லை!
உன் காந்த ஈர்ப்பு பேச்சிலோ
என்னை மறக்கிறேன் .
உன் உயிரைக் குடிக்கும் மௌனத்திலோ
என்னை மரணிக்கிறேன் !!
என்னுள், காதல் பிறந்த நாளை
நான் அறியேன்!
ஆனாலும் ஒன்று சொல்வேன்...
என் "காதல்" பிறந்த நாள்
இன்று.....!!!
என்னுடைய அவள்....!?
என் குருதி தெளித்து
காதல் தேசம் புதுமை காணட்டும்!!!
உன்னுடைய பிரியங்களை
என் மனம் அறியும்...
உன்னில் இருக்கும்
வலிகள் புரியும்...
உனக்குள் புதைந்த
ரகசியம் தெரியும்...
அது மட்டுமா...!?
என் பாதை கூட
உன் வருணனைகளை தாங்கியது.....
என் மீது உனக்கு இருக்கும்
புரிதல் கூட பிடிக்கும்...
இருப்பினும்,
என் அமைதியின் லட்சியம் யாதெனில்...!?
"நான் உன்னை ரசிப்பதே"...
யாரும் படிக்க முடியா கவிதையை
படித்த போது
காதலில் விழுந்தேன்
காதல் அறியா கவிஞன்
கலையோடு ஒரு போராட்டம்
காதல் இல்லை என்று
கூறிகிறான்
அவளை வரையறுக்க
காதல் ஒரு பொருட்டு அல்ல
புதிய தயக்கம் பேசுவதில்
உண்மை உடைத்து எப்படி
கூறுவேன் ?
உயிர் பறிக்கும் அவள் கண்களை பற்றி...!!
இது கடைசி வரை நட்பாக
வாய்ப்பு இல்லை
வெட்கம் விட்டு சொல்லுகிறேன்
அவள் கண்கள் எனை
வீழ்த்தும் ஒரே அம்பு
அன்புடன்,
Jay